நாகர்கோவிலில் தென் இந்திய திருச்சபையின் சார்பில் நம்ம வீட்டு கல்யாணம் குமரி மக்களை உறுப்பினர் விஜய் வசந்த் புதிய தம்பதிகளுக்கு தலா ரூ.2_லட்சம் அன்பளிப்பு வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட தென்னிந்திய திருச்சபை பேரவை சார்பில் ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு பேரவை சார்பில் அனைத்து வசதிகள் செய்து திருமணம் நடத்துவது வழக்கம் இதைபோல் இந்த ஆண்டு 2023 நம்ம வீட்டு கல்யாணம் பேரவை சார்பில் நடைபெற்றது. இதில் ஏழை 8 தம்பதிகளுக்கு திருமணம் அனைத்து வசதிகள் செய்து நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லுரி CSI ஆலயத்தில் குமரி மாவட்ட CSI பேராயர் டாக்டர் ஏ. ஆர். செல்லையா தலைமையில் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற வரவேற்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குமரி பாராளுமன்ற விஜய் வசந்த் கலந்துகொண்டு மணமக்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது பங்களிப்பாக ஒரு தம்பதிக்கு 2 லட்சம் தனது சொந்த செலவில் நிதியுதவி வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் உட்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.