• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கைலாசநாதர் கோவிலில் 500 கிலோ நெய் ஊற்றி மகா கார்த்திகை தீப வழிபாடு..!

ByM. Dasaprakash

Nov 26, 2023
  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இக்கோவிலானது திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக மலையை சுற்றி கிரிவலப் பாதையுடன் அமைந்துள்ளதால் இக்கோவிலானது தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 

முன்னதாக கைலாசபட்டி பொதுமக்கள் சார்பாக அகண்ட விளக்கு எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றி வந்து மகா கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தில் அகண்ட விளக்கு ஏற்றி வைத்தனர் அதனைத் தொடர்ந்து, இக்கோவில் மகா கார்த்திகை தீபம் திருவிழா நடைபெற்றது. கார்த்திகை தீபம் திருவிழா நிகழ்சியில் 500 கிலோ நெய் கொப்பரையில் ஊற்றப்பட்டு பின்பு சிறப்பு வழிபாடுகளை செய்து மகா கார்த்திகை தீபம் அர்ச்சகர் கீர்த்தி வாசகன் ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கைலாசநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபேற்றது. மகா கார்த்திகை தீபத்தை பார்ப்பதற்காக பெரியவலம் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா தீபத்தை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.