• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகன திருட்டில் இளைஞர்கள் கைது…

ByP.Thangapandi

Nov 21, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வலையபட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி டி.எஸ்.பி நல்லு தலைமையில் தனிப்படை அமைத்து உசிலம்பட்டி நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வாகன சோதனையின் போது தேனி ரோட்டில் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டு வந்த இரு இளைஞர்களை இடைமறித்து சோதனை நடத்தியதில் இருசக்கர வாகனத்தை திருடி வந்தது கண்டறியப்பட்டு தேனியைச் சேர்ந்த ராகுல், அஸ்கர் என்ற இரு இளைஞர்களை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.