• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சுருளி தீர்த்தம் செல்லும் பாதை குண்டும் குழியும் … கண்டும் காணாத வனத்துறை ..!

ByM. Dasaprakash

Nov 20, 2023

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுற்றுலாத் தலமான சுருளிதீர்த்தத்தில் அருவிக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக சேதமடைந்து இருப்பதால் பொதுமக்களும், ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் சுருளி அருவியில் நீராடி செல்வது வழக்கம் பக்தர்கள் கால்களில் செருப்பு இல்லாமல் நடந்து செல்வதால் கல்லுகள் குத்துவதால் பெரும் அவதிப்படுகிறார்கள்.வனத்துறையின் சார்பாக நுழைவு கட்டணம் ரூபாய் 30 வசூலிக்கப்படுகின்றது.வனத்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து போர்க்கால அடிப்படையில் பாதைகளை சரி செய்யுமாறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் வைக்கின்றனர்.