• Thu. Jan 29th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இனி சொகுசு காரையும் வாடகைக்குப் பயன்படுத்தும் வசதி.., அரசு அறிவப்பு..!

Byவிஷா

Nov 18, 2023

தமிழகத்தில் இனி சொகுசு காரையும் வாடகைக்கு பயன்படுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை வாடகைக்கு பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஸ்விப்ட், மாருதி சுசுகி, டாடா இண்டிகோ மற்றும் வேகன் ஆர் கார்களில் குறிப்பிட்ட மாடல்களை மட்டுமே மஞ்சள் போர்டுடன் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி இருந்து வந்தது.
இந்த நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இனி வரும் நாட்களில் அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உத்தரவு மூலம் குறிப்பிட்ட கார் வகைகளை மட்டுமே வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்ற விதி மாற்றப்படுகிறது. இதன்மூலம் மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் சொகுசு மற்றும் ஆடம்பரம் கார்கள் உள்ளிட்ட அனைத்து வகை கார்களையும் பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம்.
சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஆடம்பர கார்களையும் வாடகைக்குப் பயன்படுத்தி பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தனிப்பட்ட மற்றும் டிராவல்ஸ் முறையிலும் அல்லது ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களை மையப்படுத்தியும் ஸ்விப்ட், மாருதி சுசுகி, டாடா இண்டிகோ போன்ற கார்கள் மஞ்சள் போர்டுடன் வாடகைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதனால் சுற்றுலாவை விரும்பும் பயணிகள் தங்களுக்கு பிடித்த சொகுசு மற்றும் ஆடம்பர கார்களில் வாடகை முறையில் பயணிக்க முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் அனைத்து வகை கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து வாடகைக்கு பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.