• Sun. Apr 28th, 2024

பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த பிரபல நடிகை..!

Byவிஷா

Nov 18, 2023

நடிகை விஜயசாந்தி பா.ஜ.க.வில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மேடக் எம்.பி.யும், மூத்த திரைப்பட நடிகையுமான விஜயசாந்தி முன்பு பாஜகவில் இருந்தார். பாஜகவில் அவருக்கு உரிய முக்கியத்துவத்தை தரவில்லை எனவும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட அவருக்கு தேர்தல் தொடர்பான எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை எனவும் இதனால் விஜயசாந்தி கடும் அதிருப்தியில் இருந்ததாகவும், பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் இருந்தும் ஒதுங்கி வந்ததால் பாஜகவில் இருந்து விலகி விரைவில் காங்கிரஸில் சேரப் போவதாக சமீபத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லு ரவி தெரிவித்தார்.
இதற்கிடையில் நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார். இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்த நடிகை விஜய சாந்தி, தெலங்கானா மாநில பரப்புரைக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விஜயசாந்தி சினிமாவில் நடித்துக் கொண்டே பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். 1996-ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதன்பிறகு, லோக்சபா தேர்தலில் பாஜக-வின் நட்சத்திர பேச்சளார் ஆனார். 1998-ல் பாஜகவில் இணைந்து நேரடி அரசியலில் தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2009 ஆம் ஆண்டு அம்மா தெலுங்கானா கட்சி என தனிக்கட்சி தொடங்கினர். பின்னரே அப்போதைய டிஆர்எஸ் (இப்போதைய பிஆர்எஸ்) கட்சியில் இணைந்தார். அதன் பிறகு 2009-ல் மேடக் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு கேசிஆர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக விஜயசாந்தி காங்கிரஸில் சேர்ந்தார். இதனைத்தொடர்ந்து, விஜயசாந்தி கடந்த 2020-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி மீண்டும் பாஜகவில் இணைந்தார். தற்போது மீண்டும் பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *