• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சிவகாசி ஒன்றியப் பகுதிகளில், மழைக்கால முன்னெச்சரிக்கை…

ByKalamegam Viswanathan

Nov 17, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஒன்றியப் பெருந்தலைவர் முத்துலட்சுமி, துணை தலைவர் விவேகன்ராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சிவகாசி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் மழைக் காலத்தை முன்னிட்டு செய்ய வேண்டிய முக்கியப் பணிகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

மேலும் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள், மழைநீர் வடிகால்களை ஒழுங்குபடுத்துதல், மழைநீர் சேகரிப்பு பணிகள், கண்மாய்களை கண்காணித்தல், நோய் தடுப்பு முகாம்கள், காய்ச்சல் கண்டறியும் முகாம்கள், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் ஒன்றியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சாலைகளை சீரமைப்பது, சிறிய பாலங்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை விரைந்து செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீீனிவாசன், புகழேந்தி மற்றும் அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.