• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேசிய பத்திரிக்கையாளர் தினம்.., மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து..!

ByKalamegam Viswanathan

Nov 16, 2023

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது,

1966 ம் ஆண்டு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான நவம்பர் 16 தேசிய பத்திரிகைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு தேசிய பத்திரிகையாளர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது .

நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் செய்தியை சேகரிக்க உயிரை பணிய வைத்து இரவும், பகலுமாக தொடர்ந்து உழைத்து வரும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலையும், படுகொலைகளையும் தடுத்து பத்திரிக்கையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்திட மத்திய மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் .

உண்மையை நிலைநாட்டி தேசத்தை பாதுகாக்க அயராமல் உழைத்து கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் அணைவருக்கும் தேசிய பத்திரிக்கையாளர்கள் தின நல் வாழ்த்துக்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.