• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

மலைவாழ் மக்களுடன் எம்.எல்.ஏ. அய்யப்பன் தனது குடும்பத்துடன் புத்தாடை, இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்…

ByP.Thangapandi

Nov 12, 2023

நாடு முழுவதும் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்து பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இன்று குறிஞ்சி நகரில் உள்ள மலைவாழ் மக்களுக்கு உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் தனது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து புத்தாடை மற்றும் இனிப்பு, பட்டாசு வழங்கினர்., பின்னர் குழந்தைகளுக்கு பட்டாசு வழங்கி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.