• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

புலிக்கு தண்ணி காட்டிய கரடி…

Byமதி

Oct 25, 2021

கர்நாடக வனப்பகுதியில் புலியுடன் கரடி சண்டையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் நாகர்ஹோலே வனப்பகுதியில் உள்ள தேசிய வனவிலங்கு சரணாலயத்தில், விலங்குகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களில் அழைத்துச் செல்ல கர்நாடக வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை காண்பதற்காக இந்த வனப்பகுதிக்குள் சென்றபோது கரடியும் புலியும் சண்டையிடும் காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது கரடி புலியை துரத்தியபடி செல்வதும், ஒரு கட்டத்தில் புலி கரடியை பார்த்து திரும்பி நின்றதும் கரடி சிறிது நேரம் புலியை பார்த்து விட்டு வனப்பகுதிக்குள் சென்று மறையும் காட்சி தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.