• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குமரியில் பாஜகவினர் வீடுகளில் பாஜக கொடியேற்றம்…

சென்னையில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் சுவருக்கு வெளியே, மாநகராட்சி சாலையில் பாஜக கொடி காவல்துறை அனுமதி இல்லாமல் ஏற்றப்பட்டது. பொது இடத்தில் காவல்துறை அனுமதி இன்றி கொடி ஏற்றக்கூடாது என்ற நிலையில், அண்ணாமலை வீட்டு சுவருக்கு வெளியே இயற்றிய பாஜக கொடி கம்பத்தை.சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறை அகற்றியது. இதன் எதிரொலியாக அண்ணாமலை, தமிழகம் முழுவதும் 100 நாட்களில், 10.000 கொடிக்கம்பம் நாட்டப்பட்டு பாரதிய ஜனதா கொடி இயற்றப்படும் என அறிவித்தார்.

இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல இடங்களில் புதிய கொடிக்கம்பம் நிறுவமுடியாத நிலையில் பழைய கிழிந்த நிலையில் உள்ள கொடிகளை மாற்றப்போகிறோம் என சில இடங்களில் பாஜகவின் செயலையும் காவல்துறை தடுத்து விட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பொது இடங்களில் பாஜக கொடி கம்பம் அமைத்து பாஜக கொடி இயற்றும் முயற்சி தடுக்க பட்ட நிலையில், குமரி மாவட்டத்தில் இன்று (நவம்பர்_5)யில். 28 மண்டலங்களில் கட்சி நிர்வாகிகள் வீட்டின் மாடியில் பாஜகவினர் கட்சி கொடி இயற்றினர்.

நாகர்கோவிலில் மாநகராட்சி பாஜக உறுப்பினரும், பாஜகவின் மாவட்ட பொருளாளருமான முத்துராமன் வீட்டின் மாடியில் பாஜக கொடி ஏற்றி பங்கேற்ற மாநில, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.