• Mon. May 11th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

தமிழ் சேவா சங்கத்தின் சார்பில்.., பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடை வழங்கல்..!

ByM.maniraj

Nov 4, 2023

தமிழ் சேவா சங்கத்தின் சார்பில், குருவிக்குளம் ஒன்றியம் முக்கூட்டுமலையில் உள்ள இந்து தனியார் துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடை வழங்கப்பட்டது.
தமிழ் சேவா சங்கத்தின் நிர்வாக அறங்காவலர் சு.பா. ஞான சரவணவேல் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் சேவா சங்கத்தின் அறங்காவலர் சே.சிவகுரு பறையனார் மற்றும் மாநில அமைப்பாளர் பாவேந்தன் வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம் முக்கூட்டுமலையில் உள்ள இந்து தனியார் துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மழை, வெயில் காலங்களில் பாதுகாப்பாக பள்ளி செல்வதற்கு குடை வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி இந்திரா தலைமை வகித்தார் ஊர் கிராமத்தின் சார்பாக சின்னத்தாய் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ் சேவா சங்கத்தின் நிர்வாகிகள் பாபு, மற்றும் ராஜா ஆகியோர் மாணவர்களுக்கு குடைகள் வழங்கினர்.