• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலத்திற்கு நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு…

ByKalamegam Viswanathan

Nov 3, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மன்னாடி மங்கலத்தை இணைக்கும் வகையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பாலம் கட்டும் பணி வைகை ஆற்றின் குறுக்கே நடைபெற்று வருகிறது. இதனை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மன்னாடிமங்கலம் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் நோக்கில் அதனை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நெடுஞ்சாலைத்துறை, நில அளவை அதிகாரிகள் ஒப்பந்ததாரரின் பணியாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது,
பாலம் கட்ட வேண்டியது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அதற்கு நாங்கள் நிலம் வழங்க தயாராகவே உள்ளோம்.

ஆனால் உரிய இழப்பீடு சரியான முறையில் வழங்காததால் தான் நாங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கிறோம். இது குறித்து அரசு அதிகாரிகள் உரிய இழப்பீட்டினை வழங்கி பாலம் கட்டும் பணியை தொடங்குமாறு வேண்டுகோள் விடுகிறோம் என்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரி சொக்கர் என்பவர் மக்களை மிரட்டியதாகவும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் வாய் மொழியில் புகார் தரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை மற்றும் நில அளவை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் தெரிகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை செய்து பொதுமக்களுக்கு நிலத்திற்கு உண்டான உரிய இழப்பீடு வழங்கி பாலப்பணியை துவங்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.