• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முழுமையாக வறண்டு போகும் அபாயத்தில் தென்பெண்ணயாறு..!

Byவிஷா

Nov 2, 2023

தென்பெண்ணையாற்றில் நாளுக்கு நாள் நீர்வரத்து குறைந்து வருவதால் முழுமையாக வறண்டு போகும் அபாயத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கெலவரப் பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை ஆகியவை முழுமையாக நிரம்பின. இதனால் கடந்த ஆண்டில் கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது, க டந்த ஆகஸ்ட், செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இருபுறமும் கரைகளை தொட்டவாறு ஆர்ப்பரித்து வெள்ள நீர் சென்றது.
இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தென் பெண்ணை யாற்றுக் கரையோரம் உள்ள மக்களுக்கு பலமுறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு இல்லாத நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து போதிய நீர் வரத்து கிருஷ்ணகிரி அணைக்கு வரவில்லை.
இதன் காரணமாக ஆற்றில் நீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை யாற்றில் நீர்வரத்து என்பது வெகுவாக குறைந்துள்ளது. நாளுக்கு நாள் ஆற்றுப் பகுதியில் சிற்றோடைகளில் ஒடுவது போல் நீர் செல்வதை காண முடிகிறது. இதே நிலை தொடருமாயின் வற்றாத தென்பெண்ணையாறு முழுமையாக வறண்டு போகும் நிலைக்கு வாய்ப்புள்ளது.