• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பெப்சியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO), பத்ம விபூசண் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 28, 1955)…

ByKalamegam Viswanathan

Oct 28, 2023

இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி (Indra Krishnamurthy Nooyi) அக்டோபர் 28, 1955ல் சென்னையில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். அவர் தன் பள்ளிப்படிப்பைச் சென்னையிலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் AIHSSல் நிறைவு செய்தார். அவர் 1974 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் வேதியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும் கல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் MBA பட்டம் பெற்றார். இந்தியாவில் நூயியின் தொழில் வாழ்க்கை ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலும் மேட்டூர் பியர்டுசெல் என்ற ஆடை நிறுவனத்திலும் தயாரிப்பு மேலாளர் பதவிகளை வகித்ததன் மூலம் தொடங்கியது. 1978 ஆம் ஆண்டு அவர் யேல் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பொது மற்றும் தனியார் மேலாண்மை பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1980 ஆம் ஆண்டு பட்டம் பெற்று, நூயி போஸ்டன் கன்சல்ட்டிங் குரூப் (BCG) நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். மேலும் மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் பொவரி ஆகியவற்றில் திட்டம் தொடர்பான பதவிகளை வகித்தார்.

நூயி பெப்சிகோ இயக்குநர்கள் குழுமத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார். நூயி சர்வதேச மீட்புக் குழு, கேட்டலிஸ்ட் மற்றும் லிங்கோலன் சென்டர் பார் தி பெர்பார்மிங் ஆர்ட்ஸ் ஆகிய அமைப்புகளின் உறுப்பினராகவும் சேவை புரிகின்றார். அவர் யாலே கார்பரேஷனின் தொடர் ஆய்வாளராகவும், டிரஸ்ட்டீஸ் ஆப் ஐசென்ஹோவர் பெலோஷிப்ஸின் போர்டு உறுப்பினராகவும் இருக்கின்றார், மேலும் தற்போது அமெரிக்க-இந்திய வணிகக் கவுன்சிலின் தலைவராகவும் சேவையாற்றுகின்றார். 2007 ஆம் ஆண்டு, அவர் இந்திய அரசாங்கத்தால் பத்ம விபூசண் விருதை பெற்றுக் கொள்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். 2008 ஆம் ஆண்டு, அவர் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தின் பெலோஷிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நூயி பெப்சிகோநிறுவனத்தில் 1994 ஆம் ஆண்டில் சேர்ந்தார். பின்னர் 2001 ஆம் ஆண்டு தலைவர் மற்றும் CFO ஆக பதவியேற்றார்.

நூயி அவர்கள் நிறுவனத்தின் உலகளாவிய திட்டத்தை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கின்றார். மேலும் 1997 ஆம் ஆண்டு அதன் உணவுவிடுதிகள் விற்பனையை டிரைகானுக்கு மாற்றியது உள்ளிட்ட பெப்சிகோவின் மறுகட்டமைப்பில் முன்னிலை வகித்தார். டிரைகான் இப்போது யூம் பிராண்ட்ஸ் என அழைக்கப்படுகின்றது. 1998 ஆம் ஆண்டில் டிரோபிகானா நிறுவனத்தைக் கையகப்படுத்தி குவாக்கர் ஓட்ஸ் நிறுவனத்துடன் இணைத்ததில் முதன்மைப் பொறுப்பை எடுத்துக்கொண்டார். இந்நிறுவனமும் கடோரேட் இடமிருந்து பெப்சிகோவிற்கு வாங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் அவர் பெப்சிகோவின் 44 ஆண்டுகால வரலாற்றில் ஐந்தாவது தலைமை நிர்வாக அதிகாரி ஆனார். வணிக அதிகாரிகள் அவரது ஆழமாக வழிநடத்தும் திறன் மற்றும் இதயப்பூர்வமான உழைப்பு மற்றும் வேடிக்கை ஆகியவற்றைக் கண்டு வியப்படைகின்றனர். பிசினஸ்லீக் பத்திரிக்கையின் படி, அவர் 2000 ஆம் ஆண்டில் தலைமை நிதி அதிகாரி பதவி ஏற்றதிலிருந்து, நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 72 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது. அதன் நிகர லாபம் 2006 ஆம் ஆண்டில் இருமடங்குக்கும் அதிகமாக $5.6 பில்லியனாக இருந்தது.

வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிக்கையின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டின் வெளிவந்த கவனிக்கத்தக்க 50 பெண்கள் பட்டியலில் நூயியின் பெயர் இடம்பெற்றது. மேலும் டைம் பத்திரிக்கையின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த உலகில் 100 மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்கள் பட்டியலிலும் இடம் பெற்றார். போர்பஸ் பத்திரிக்கை 2008 ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த 3 ஆவது பெண் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டிருந்தது. குளோபல் சப்ளை செயின் லீடர்ஸ் குரூப், இந்திரா நூயியின் பெயரை 2009 ஆம் ஆண்டின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி ஆகக் குறிப்பிட்டிருக்கின்றது. 2008 ஆம் ஆண்டு பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கையில், இந்திரா நூயி $14,917,701 ஐ மொத்த சம்பளமாகப் பெற்றார். அதில் அடிப்படைச் சம்பளமான $1,300,000, போனஸ் $2,600,000, வழங்கப்பட்ட பங்குகள் $6,428,538 மற்றும் விருப்பமாக வழங்கப்பட்டவை $4,382,569 ஆகியவை உள்ளடங்கும். 2009 ஆம் ஆண்டின் போர்பஸ் ஆய்வறிக்கையின் படி இந்திரா நூயி உலகின் 3 ஆவது மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாகக் குறிப்பிடப்பட்டார்.

ஜனவரி 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க-இந்திய வணிகக் கவுன்சில் (USIBC) தலைவராக நூயி தேர்ந்தெடுக்கப்பட்டார். இலாபநோக்கற்ற வணிக ஆலோசனை அமைப்பான இது, இந்தியாவில் வணிகம் செய்யும் உலகின் 300க்கும் மேற்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களைக் குறிக்கின்றது. நூயி USIBC இன் போர்டு இயக்குநர்களை வழிநடத்துகின்றார். இது அமெரிக்க தொழில்துறையைப் பிரதிபலிக்கும் 60க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளின் கூட்டமைப்பு ஆகும். உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சியின் தலைவர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆவார். ] பார்ச்சுன் பத்திரிகை அதன் 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கான வணிகத்தில் மிகவும் வலிமையான பெண்கள் மதிப்பீட்டில் நூயியை முதலிடத்தில் வைத்திருந்தது.