• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Oct 21, 2023

சிந்தனை துளிகள்

கவலையை தீர்க்க வேண்டும்
என்றால்.. அதன் ஆணி வேரை
கண்டுபிடிக்க வேண்டும்.!

பேச வேண்டிய நேரத்தில் மட்டும்
பேசினால்.. உங்கள் வாழ்க்கை
இனிமையாக இருக்கும்.!

தன்னம்பிக்கை இருந்தால் தான்..
குறுகிய வட்டத்தில் இருந்து
வெளியில் வந்து மகிழ்ச்சியாக
வாழ முடியும்.

சவால்களை தைரியமாக
எதிர்கொண்டால் மனம்
உறுதி அடையும்.

ஒவ்வொரு வலியும் உங்களை
வலிமை ஆக்குகிறது என்பதை
எப்போதும் நியாபகம்
வைத்துக் கொள்ளுங்கள்.!

உங்களுக்குள் இருக்கும்
மன தடைகளை நீக்கினால்..
உங்கள் முன் இருக்கும்
பல வாய்ப்புக்கள்
தெளிவாக தெரியும்.

எண்ணங்களை சரியாக
கையாளும் கலையை
பெற்றால்.. ஆசைப்படும்
வாழ்க்கையை உருவாக்க
முடியும்.!

உங்களுடன் நீங்கள் நல்லதையே
பேசினால்.. உங்கள்
வாழ்க்கை நன்றாக இருக்கும்.