• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அக்.24ல் வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்..!

Byவிஷா

Oct 18, 2023

வரும் அக்டோபர் 24ஆம் தேதி சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இங்கு வார நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இந்தப் பூங்காவைச் சுற்றிப் பார்க்க ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். இந்த உயிரியல் பூங்காவில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் வார விடுமுறை விடப்படுவதால் அன்றைய தினம் பூங்கா இயங்காது.
இந்நிலையில் வரும் 24-ம் விஜய தசமி கொண்டாப்படுகிறது. அன்றைய தினத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அதிகளவிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வார விடுமுறை நாளான செவ்வாய்கிழமை அன்று பூங்கா இயங்கும் என அதன் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.