• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தே.மு.தி.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

Byமதி

Oct 24, 2021

செங்கல்பட்டு அடுத்த, தெள்ளிமேடு கிராமத்தை சேர்ந்த தே.மு.தி.க., நிர்வாகி ராஜசேகர். இவர் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் ஒரு தரப்பிற்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினருக்கு எதிராகவும் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர் மீது சில கோவத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், குடும்பத்தினருடன் வீட்டில் இரவு உறங்கி கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று அதிகாலை 2 மணிக்கு, ராஜசேகர் குடிசை வீட்டின் மீது, பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.

இதில், வீட்டின் ஒரு பகுதி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இதுபற்றி வழக்கு பதிவு செய்து பாலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.