• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்…

ByKalamegam Viswanathan

Oct 13, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் இருந்தது. இதனை அடுத்து திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் திருப்பரங்குன்றம் நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் சரவண பொய்கையில் இறங்கி பிணத்தை கைப்பற்றினார்.

48 வயது மதிக்கத்தக்க வாலிபரின் பிணத்தை கைப்பற்றினர் நீல நிற சட்டை மற்றும் வேஷ்டியில் இருந்த அவரின் உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .

இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை செய்து வருகின்றனர்.