• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பரவை முத்துமாரியம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா..!

Byவிஷா

Oct 6, 2023
பரவை கிராமத்தில் உள்ள முத்து நாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் பரவையில் முத்து நாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா செப்டம்பர் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த காப்புகட்டி விரதம் இருக்க தொடங்கினர். இதையடுத்து செப்டம்பர் 27 ம் தேதி முதல் தொடர்ந்து மண்டக படிதாரர்கள் சார்பில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த செவ்வாய்க் கிழமை வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு புதன் கிழமை பரவை காவல்காரர்கள் வகையறா சார்பில் மண்டகப்படி நடை பெற்றது. அய்யனார் கோயில் பொங்கல், குதிரை எடுப்பு, பால்குடம் ஆகியவை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.