• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிஜேபியுடன் கூட்டணி முறிவு… அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்சசியை வெளிப்படுத்திய இஸ்லாமியர்கள்..,

பி.ஜே.பியுடன் கூட்டணி முறித்துக் கொண்டதற்காக சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இஸ்லாமியர்கள் இனிப்பு ஊட்டி மகிழ்சசியை வெளிப்படுத்தினர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பாலாஜி நகரில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை அவரது இல்லத்தில் தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் சந்தித்து பேசினார். அப்போது சிறுபான்மை மக்களுக்கு பாதிக்கக்கூடிய அளவில் செயல்படும் ஒன்றிய பி.ஜே.பியுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுகவிற்கும் கூட்டணி முறிவு குறித்து முடிவெடுத்த அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கே.டி. ராஜேந்திரபாலாஜியிடம் அவர்கள் நன்றி கூறி சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர். நிர்வாகிகள் முத்துவிலாசா, காதர்ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.