• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அன்னா மாணி பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 23, 1918)…

ByKalamegam Viswanathan

Aug 23, 2023

அன்னா மாணி ஆகஸ்டு 23, 1918ல் பீருமேடு, திருவாங்கூரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு குடிசார் பொறியாளர். அவரது குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் இவர் ஏழாவது குழந்தை. அவரது குழந்தைப் பருவத்தில் பெருவேட்கையுடைய வாசகராக இருந்தார். அவர் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது காந்தியின் நடவடிக்கைகள் மூலம் ஈர்க்கப்பட்டார். தேசிய இயக்கதின்பால் ஈர்க்கப்பட்டு, அவர் கதர் ஆடைகள் மட்டுமே அணிய முடிவு எடுத்தார். அவர் நடனத்தைத் தொடர விரும்பினார். மருத்துவம் பயில வேண்டும் என்று ஆர்வம் கொண்ட போதிலும், இயற்பியல் மீது கொண்ட பற்றால் இயற்பியல் கற்க முற்பட்டார். 1939 ஆம் ஆண்டில், மெட்ராஸில் உள்ள பச்சையப்பாஸ் கல்லூரியில், இயற்பியல் மற்றும் வேதியியலில் பி.எஸ்சி ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 1940 ஆம் ஆண்டில், பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் ஆராய்ச்சிக்கான உதவித்தொகை பெற்றார்.

மாநிலக் கல்லூரி, சென்னையில் படிப்பை முடித்த பிறகு, அவர் பேராசிரியர் ச.வெ.இராமன் கீழ், மாணிக்கம் மற்றும் வைர ஒளியியல் பண்புகள் ஆராய்ச்சியில் வேலை செய்தார். அவர் ஐந்து ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய போதிலும், இயற்பியலில் முதுகலை பட்டம் இல்லை என்பதால், முனைவர் பட்டம் அவருக்கு மறுக்கப்பட்டது. அவர் இயற்பியல் படிப்பைத் தொடர பிரிட்டன் சென்றார் என்றாலும், அவர் இம்பீரியல் காலேஜ் லண்டனில் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் படிப்பை தேர்ந்தேடுத்தார். அவர் வானிலை கருவிகளில் நிபுணத்துவம் பெற்றார். 1948 ல் இந்தியா திரும்பிய பிறகு, அவர் புனேவில் உள்ள வானிலை ஆராய்ச்சி துறையில் சேர்ந்தார். அவர் வளிமண்டலவியல் கருவியாக்கம் பற்றிய பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டார்.

அன்னா மாணி 1976 ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆராய்ச்சி துறை துணை இயக்குனராக ஓய்வு பெற்றார். 1980ல் ‘The Handbook for Solar Radiation data for India மற்றும் 1981 ல். Solar Radiation over India இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் 1987ல் KR ராமநாதன் பதக்கம் வென்றார். அவர் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் துணை இயக்குநராக பணி புரிந்தார். அவர் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்தார். அவர் சூரிய மற்றும் காற்று ஆற்றல் அளவீடுகள், ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்தி ஏராளமான ஆய்வேடுகளைப் வெளியிட்டார். அன்னா மாணி 1994ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, ஆகஸ்டு 16, 2001ல் தனது 82வது அகவையில் திருவனந்தபுரத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.