• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாணவர்களிடையே ஓர் சிறந்த கலந்துரையாடல்..,

ByM.S.karthik

Oct 9, 2025

கல்விக் குழுமம் மற்றும் ACT- (American college Testing ) சார்பாக
கல்வி சர்வதேச பொதுப்பள்ளி – சோழவந்தானில் சர்வதேச அளவிலான கல்வி வாய்ப்புகளை மாணவர்களிடையே விரிவுபடுத்திடும் நோக்கில் ஓர் சிறந்த கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ACT நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷேன் கிங் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களைச் சந்தித்து அவர்களுடன் ACT நிறுவனத்தின் கல்வித்திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் மற்றும் விளைவுகள் குறித்து விரிவாக விளக்கினார். அதில் உலகளாவிய உயர்கல்வி நிறுவனங்களில் ACT மதிப்பீட்டின் முக்கியத்துவம், அதன் வழிகாட்டுதலின் மூலம் மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான வாய்ப்புகளை எவ்வகையில் மேம்படுத்தலாம் என்பதையும் அவர் மிக அருமையாக விளக்கினார். இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் திட்டமிடல், இலக்கை நோக்கி முயற்சி செய்தல் மற்றும் சரியான முடிவெடுக்கும் திறன் உயர்கல்வி மற்றும் வாழ்க்கையில் வெற்றி அடைய அடிப்படை அம்சங்கள் போன்றனவற்றை விளக்கி மாணவர்களுக்கு உலகளாவிய பாதைகளை அறிந்து ஆராயும் புதிய வாய்ப்புகள் குறித்து தெரிவித்தார்.

கல்விக் குழுமத்தின் பிரதிநிதிகள், “ACT உடனான இந்த இணைப்பு, எங்கள் கல்வி தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவதிலும், மாணவர்களை சர்வதேச தரத்திற்குத் தயார்படுத்துவதற்கான கருத்துகளைப் பகிர்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ACT International Channel Operations Director பினோத் சால்கோ மற்றும் Regional Director (Thailand and India) டாக்டர் சார்ல்ஸ் சிங் ஆகியோர் ACT தயாரிப்புகள் குறித்து விரிவாக விளக்கினர்.

இந்நிகழ்ச்சி கேள்வி–பதில்கள் அமர்வுடன் நிறைவுற்றது. மாணவர்கள் கல்வித் திட்டமிடல் மற்றும் பல்கலைக்கழகத் தயாரிப்பு தொடர்பாக பல கேள்விகளை எழுப்பினர். ஆசிரியர்களும் மாணவர்களும் பெருமளவில் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கினர்.

நிகழ்ச்சியின் நிறைவில், கல்விப் பள்ளியின் தலைவர் டாக்டர் .செந்தில் குமார் மற்றும் தாளாளர் குமரேஷ் டைரக்டர் கோவிந்த் மற்றும் ஷர்மிளா ஆகியோர் ACT நிறுவனத்துடன் இணைந்ததை மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.