• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அருப்புக்கோட்டை அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை..!

ByKalamegam Viswanathan

Jul 19, 2023

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மனைவி பிரிந்து சென்ற சோகத்தில், கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள மேட்டுதொட்டியாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லக்சன் (44). இவரது மனைவி புஷ்பா (36). லக்சன் சொந்தமாக தோட்டம் வைத்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் லக்சனுக்கும், அவரது மனைவி புஷ்பாவிற்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 4 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். புஷ்பா, பாலையம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். லக்சன், புஷ்பாவை பலமுறை நேரில் சென்று அழைத்தும் அவர் வரவில்லை. மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் மன வேதனையில் இருந்த லக்சன், பொய்யாங்குளத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விரைந்து சென்று லக்சன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.