கன்னியாகுமரி மாவட்டம், பெரியநாயகி பகுதியில் உள்ள கடற்பரப்பில் போடப்பட்டுள்ள தூண்டில் பாலத்தை தரமாக அமைக்க அங்குள்ள மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி பெரிய நாயகி பகுதியில் உள்ள கடல் பரப்பில் போடப்பட்டுள்ள தூண்டில் பலம் அமைப்பு தரமானதாக இல்லாமல் இருப்பதுடன், கடலில் இப்போது போடப்பட்டுள்ள 171 மீட்டர் நீளம் என்பது போதாது அதனை இன்னும் 300 மீட்டர் கூடுதலாக நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உடன் கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா தேவாலையத்தின் பங்கு தந்தை அருட்பணி உபால்ட் தலைமையில், உதவி தந்தையர்கள் இருவர், தேவாலைய நிர்வாக குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெரிய நாயகி தெரு மற்றும் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் தூண்டில் பாலம் பகுதியில் கற்களை கொட்டி, சமப்படுத்தும் ஜேசிபி இயந்திரத்தை இயக்க விடாமல் தடுத்து நிறுத்தி, தமிழக அரசுக்கு கருப்பு கொடியுடன் கோரிக்கை வைத்து கோசம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தி மு க வை சேர்ந்தவர் என்ற போதும், கன்னியாகுமரி மீனவ சமுக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் ஜீவாதார பிரச்சினை என்ற நிலையில் மீனவ மக்களின் போராட்டத்தில், குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் அவரும் மீனவ சமுகத்தை சேர்ந்தவன் என்ற நிலையில் பங்கு பெற்றதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.