• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கிய லூயி தாகர் நினைவு தினம் இன்று…

ByKalamegam Viswanathan

Jul 10, 2023

லூயி தாகர் (Louis-Jacques-Daguerre) நவம்பர் 18, 1787ல் பிரான்சில் வல் டுவாசு பகுதியில் உள்ள கோர்மீலெசு-என்-பாரிசிசு என்னும் இடத்தில் பிறந்தார். பிரான்சின், இளம் வயதில், கட்டிடக்கலை, அரங்க வடிவமைப்பு, ஓவியம் ஆகிய துறைகளில் தொழில் பயிற்சி பெற்றார். இவர் அரங்க வடிவமைப்பில் சிறந்து விளங்கினார். இவர் நேர்காட்சி போல தோன்றும் ஓவியங்களைக் கொண்ட டயோராமா எனப்படும் ஓவிய முறையைக் கண்டுபிடித்தார். இக்காட்சி அரங்கு 1822 ஆம் ஆண்டில் பாரிசில் திறக்கப்பட்டது.

உலகக் காட்சிகளை வண்ணமும் துரிகையும் இல்லாமல் அப்படியே படம் பிடிக்கும் ஒளிப்படக் கருவியை உருவாக்க ஆவல் கொண்டு, அம்முயற்சியில் ஈடுபட்டார். 1824 ஆம் ஆண்டில் யோசெப் நிசிபோர் நியெப்சு என்பவர் ஒளிப்படம் பிடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இரண்டு ஆண்டுகளின் பின்னர் டாகுவேரே அவருடன் இணைந்து ஒளிப்படத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். இக் கூட்டு முயற்சி நியெப்சு 1833 ஆம் ஆண்டில் இறக்கும் வரை நீடித்தது. டாகுவேரேயைப் பொறுத்தவரை இக் கூட்டு முயற்சியின் நோக்கம், ஏற்கெனெவே புகழ் பெற்றிருந்த அவரது டையோராமா தொடர்புடையது ஆகும். நியெப்சு உருவாக்கிய ஒளிப்பட முறை தனது டையோராமா தடாரிப்புக்கு உதவும் என டாகுவேரே எண்ணினார்.

பல ஆண்டுகள் ஆய்வுகள் நடத்தியபின் 1833 ஆம் ஆண்டில், டாகுவேரியோவகை எனப்பெயரிடப்பட்ட திருந்திய ஒளிப்பட முறை ஒன்றை டாகுவேரே அறிவித்தார். இதற்கான உரிமத்தை பிரான்சு அரசு வாங்கி, 1839 ஆம் ஆண்டு ஆகட்டு மாதம் 19 ஆம் தேதி உலகத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தது. டாகுவேரேயுன், நியெப்சுவின் மகனும் இதற்காக பிரான்சு அரசிடமிருந்து ஆண்டு தோறும் ஒரு குறித்த தொகையைப் பெற்று வந்தார். நடைமுறைக்கு உகந்தவாறு டாகுவேரியோவகை என்ற நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கிய லூயி தாகர் ஜூலை 10, 18511943ல் தனது 63வது வயதில், பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.