• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

என்ன…முதலையுடன் திருமணமா..?

Byவிஷா

Jul 3, 2023

மெக்சிகோ நாட்டில் முதலையுடன் மேயர் ஒருவர் திருமணம் செய்திருப்பது அனைவரையும் அதிர வைத்திருக்கிறது.
மெக்சிகோ நாட்டில் இருக்கும் சான்பெத்ரோ {ஹவாமெலுவா நகரத்தின் மேயராக இருப்பவர் ஹியூகோ சாசா. இவர் சமீபத்தில் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார். முதலை மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்ததும் அந்த முதலைக்கு மேயர் முத்தம் கொடுத்துள்ளார். அந்த நகரத்தில் அதிகம் வசிக்கும் பழங்குடியின மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்றாக இது இருந்துள்ளது. அதாவது மழை பெய்து இயற்கை செழிக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.