• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு…

Byமதி

Oct 20, 2021

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதியாண்டுக்கான போனஸ் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தி சாராத அடிப்படையில் இந்த போனஸ் வழங்கப்படும் என்றும் பணியாளர் நலன் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

சி பிரிவு ஊழியர்களுக்கும் மற்றும் பி பிரிவில் உள்ள நான் கெசட்டட் பிரிவினருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும் என மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசின் அறிவிப்புபடி சுமார் ஒரு மாத ஊதியம் போனசாக கிடைக்கும். மத்திய துணை ராணுவப் படையினரும் ஆயுதப் படையினரும் இந்த அறிவிப்பின் கீழ் பலன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.