• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் குறித்து முகநூலில் அவதூறாக பேச்சு…, பாஜகவை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்ய வலியுறுத்தல்…

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் குறித்து முகநூலில் அவதூறாக பதிவு செய்த பாஜகவை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்ய வலியுறுத்தி இன்று எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸார்- போலீசார் பேச்சுவார்த்தை, இதனால் பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ரீத்தாபுரம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ரமேஷ் என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.விஜய்வசந்த் குறித்து அவதூறு பரப்பும் வகையில் மோசமான வார்த்தைகளால் பதிவு செய்திருந்தார் இதனை கண்டித்து குமரி மாவட்ட காங்கிரஸார் மாவட்ட முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்,பதிவு செய்த பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர், இதுவரை வழக்கு பதிவு செய்யாது பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்யாததை கண்டித்து இன்று எஸ் பி அலுவலகத்தை முற்றுகை இட்டு காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜகவை சேர்ந்த ரமேஷ்யை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் மாவட்ட முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் எனவும் எச்சரித்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர் மேலும் சம்பந்தப்பட்ட பாஜகவே சேர்ந்த ரமேஷ்யை கைது செய்யவில்லை என்றால் தொடர போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய திடீர் போராட்டத்தால். அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.காவல் துறையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.