
மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறை அய்யப்ப நாயக்கன்பட்டியில் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும் பன்ணோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, இஜிசி, மார்பக புற்றுநோய் கண்டறியும் சோதனை, தொழுநோய் கண்டறியும் சோதனை ,காசநோய் பரிசோதனை, கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை ,உள்ளிட்ட சிறப்பு இலவச பரிசோதனைகள் நடைபெறுகிறது. சிறப்பு சிகிச்சைக்கான ஆலோசனைகள் நடைபெறுகிறது. இதில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம் எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவத்திற்கான சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் செய்து வருகிறார்.
