• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

74 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கபடி போட்டி…

ByKalamegam Viswanathan

Jun 19, 2023

மதுரை மாவட்டம் ஆலங்கொட்டாரம் கிராமத்தில் உள்ள அரசன் சன்முகனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மூன்றாம் ஆண்டு கபடி போட்டி வி சி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்றது. மாநில அளவிலான நடைபெற்ற போட்டியில் தமிழக முழுவதும் இருந்து 74 அணிகள் பங்கேற்றன.முதல் பரிசினை மேட்டுநீரேத்தான் அணியும், இரண்டாவது பரிசினை பாறைப்பட்டி அணியும் ,மூன்றாவது பரிசினை மீனாட்சிபட்டி, நான்காவது பரிசினைண செக்கானூரணி அணியும் பெற்றனர். தொடர்ந்து எட்டு அணிகளுக்கு கோப்பையும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வி.சி. ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் மற்றும் ஆலங்கொட்டாரம் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.