

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக, ரிஷபம் ஊராட்சிக்கு உட்பட்ட ராயபுரத்தில்திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை வகித்தார்.மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச் செல்வன், ரிஷபம்ஊராட்சி மன்றத் தலைவரும், ஒன்றிய நிர்வாகியுமான சிறுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பால்கண்ணன் வரவேற்றார். தலைமைக் கழக பேச்சாளர் அலெக்சாண்டர்,திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினர். இதில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், பெரியகருப்பன், நீலமேகம், சந்தான லெட்சுமி, முள்ளி பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கேபிள் ராஜா,ரேகா வீரபாண்டி,கார்த்திகா ஞானசேகரன், பழனியம்மாள் ஆறுமுகம்,அண்ணமயில், கார்த்திக்,முத்துப்பாண்டி, திருமுருகன், சோழராஜன், வரதன், மாணவரணி பன்னீர்செல்வம், ஈஸ்வரன் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் பாலசுப்பிரமணியன் மேலக்கால் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
