• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Jun 14, 2023

தர்ப்பூசணி பழ பேசியல்:
தர்பூசணி பழம் இயற்கையான டோனராக செயல்படுகிறது. தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது,இது சருமம் விரைவில் வயதான தோற்றத்தை தடுக்கவும் உதவுகின்றன. தர்பூசணிகளில் அதிக நீர் சத்து நிறைந்து இருப்பதால், வறண்ட சருமம் இருப்பவர்கள் முகத்திற்கு தர்பூசணி பழச்சாறு போடலாம். வீட்டிலேயே மிக மிக சுலபமாக தர்பூசணி பேசியல் செய்துகொள்ளலாம்.

முகத்தை கழுவிய பின்னர் ஸ்க்ரப் செய்ய தர்பூசணி சாறு மற்றும் அரிசி மாவை எடுத்து கலந்து கொள்ளவேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி 3-5 நிமிடங்கள் வரை மெதுவாக ஸ்க்ரப் செய்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு முகத்தை கழுவிவிட வேண்டும்.

அடுத்ததாக தர்பூசணி பேஸ் பேக். இதற்கு ஒரு பாத்திரத்தில், சிறிது கடலை மாவு, பால் மற்றும் சிறிது தர்பூசணி சாறு எடுத்து ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி பின் 15 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும். இது முகத்திற்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.