குமரி தந்தை மார்சல் நேசமணியின் 129 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று நாகர்கோவிலில் உள்ள வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள மார்சல் நேசமணியின் மணிமண்டல சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர்.ஸ்ரீதர்,மேயர் மகேஷ் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு போராடிய முக்கிய தலைவர்களின் ஒருவரான மார்சல் நேசமணியின் 129 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது, அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தில் உள்ள மார்சல் நேசமணியின் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் மார்சல் நேசமணியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்.விஜய் வசந்த் மற்றும் மார்சல் நேசமணியின் குடும்பத்தார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மார்சல் நேசமணியின் 129 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை
