• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் சிவகாசி நாடார்கள் உறவின்முறை 75-வது ஆண்டு பவள விழா

Byp Kumar

Jun 12, 2023

மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐடாஸ்கட்டர் அரங்கத்தில் சிவகாசி நாடார்கள் உறவின்முறை சங்கத்தின் 75-வது ஆண்டு பவள விழா சிறப்பாக நடைபெற்றது
விழா தலைவர் கூடலிங்கம் வரவேற்றார். உறவின் முறை தலைவர் சுரேஷ் கனகசபை தலைமை தாங்கினார். சிவகாசி நாடார்கள் உறவின் முறை சார்பாக செவிலியர் கல்லூரி கட்டிட அடிக்கல்லை சந்திரமோகன் திறந்து வைத்தார்.
முதியோர் இல்ல கட்டிட அடிக்கல்லை அசோகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். தொழில் திறன் மேம்பாட்டு கட்டிட அடிக்கல்லை கனகசபை திறந்து வைத்தார். பவளவிழா மலரை அண்ணாமலை வெளியிட்டார். பவளவிழா கல்வெட்டை ரத்தினவேல் திறந்து வைத்தார்.

மூத்த நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு

இந்தநிகழ்ச்சியில், உறவின்முறை பொது செயலாளர்கள் கோடீஸ்வரன், ஜெயபிரகாஷ், தலைவர் சுரேஷ்கனகசபை, துணை தலைவர் பிரபாகரன், பொருளாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேளாண் தொழில் வர்த்தக சங்க தலைவர் ரத்தினவேல்,உறவின் முறையின் 75 ஆண்டுகால வரலாற்று பயணம் குறித்து பேசினார். இதனை தொடர்ந்து முன்னாள் நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டு, அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து உறவின் முறை நிர்வாகிகள் கூறுகையில், “கடந்த 1947-ம் ஆண்டு மதுரையில் சிவகாசி நடார்கள் உறவின் முறை தொடங்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்று, 1970-ல் பொது மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனையும், 1984-ல் சிவகாசி நாடார்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், 1999-ல் சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லூரியும், 2002-ல் உறவின் முறை முதியோர் இல்லமும் அமைக்கப்பட்டது. தற்போது அடுத்த கட்டமாக, அதி தொழில்நுட்ப வசதியுடன் முதியோர் இல்லம் அமைக்கப்படுகிறது. அதுபோல், நர்சிங் கல்லூரியும், தொழில் திறன் மேம்பாட்டு கட்டிடமும் அமைக்கப்படுகிறது” என்றனர்.அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது அதன் பின்னர் பட்டிமன்ற நடுவர் ராஜா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது