• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விரைவில் திருநெல்வேலிக்கு வந்தேபாரத் ரயில் சேவை தொடக்கம்..!

Byவிஷா

Jun 10, 2023

நாட்டின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வந்தேபாரத் ரயில் சேவை விரைவில் திருநெல்வேலிக்கு தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது சென்னை -பெங்களூரு, சென்னை மற்றும் கோவை இடையே வந்தே பாரத் இரயில் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த சேவையை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இந்த கோரிக்கையை பரிசீலித்த தெற்கு ரயில்வே, வந்தே பாரத் ரயிலை நெல்லை வரை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.