• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் திருமுருகாற்றுப்படை இசை தொகுப்பு வெளியீட்டுவிழா

ByKalamegam Viswanathan

Jun 11, 2023

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை இசை தொகுப்பு வெளியீட்டுவிழா தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் நடந்தது.
இந்த விழாவிற்கு, கருப்பையா பார்வதி ஆகியோர் தலைமை தாங்கி இசை தொகுப் பை வெளியிட, பேரூராட்சித் தலைவர் மு.பால் பாண்டியன் பெற்றுக் கொண்டார்.
தாசில்தார் பார்த்திபன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜவகர் வீரசிவா, கவுன்சிலர் ஜெய காந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக் வரவேற்றார்.
இதில், இசை கலைஞர்கள் சரவணன், கணேசன், ஆனந்தன், பாஸ்கர சேதுபதி, ஒளிப்பதிவாளர் மகாலிங்கம் ஆகியோருக்கு நினைவு பரிசுகளை பொறியாளர் காளிதாசன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை, பேராசிரியர் கார்த்திகா தொகுத்து வழங்கினார்.