• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை…

51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்’ படத்திற்காக நடன இயக்குனர் லலிதா ஷோபி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குனர் லலிதா ஷோபி. தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான இவர், முன்னனி நடிகர்கள் உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், சியான் விக்ரம், பிரபாஸ், ஜுனியர் என் டி ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி  நடிகர் நடிகைகள் நடித்த படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சென்ற வருடம் இவர் நடன இயக்குனராக பணியாற்றிய  `சுஃபியும் சுஜாதாயும்’ மலையாள திரைப்படம் வெளியாகி படமும், படத்தின் பாடல் காட்சிகளும் பலரது பாராட்டை பெற்றது. நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது 51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்’ படத்திற்காக நடன இயக்குனர் லலிதா ஷோபி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குனர் லலிதா ஷோபி கூறுகையில், “இந்த விருதை நம்மை விட்டு மறைந்த இயக்குனர் நரணிபுழா ஷாநவாஸ் அவர்களுக்கு சமர்பிக்கிறேன். அவருடன் பணியாற்றிய நாட்கள் மறக்கமுடியாதவை. நான் பாடலுக்கு நடனம் அமைத்து கொடுக்கையில்,  இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கண்டிப்பாக உங்களுக்கு விருது கிடைக்கும் என்று நம்பிக்கையோடு  கூறியிருந்தனர்.  அது இன்று நிறைவேறியுள்ளது.
கடவுளுக்கு நன்றி

மேலும் `சுஃபியும் சுஜாதாயும்’ படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், கேரள மாநில திரைப்பட விருது குழுவினருக்கும் மற்றும் கேரள மாநில அரசுக்கும் இத்தருணத்தில் எனது  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.