• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஏடிஎம், டெபிட் கார்டு பயனாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!

Byவிஷா

May 15, 2023

மே 22 முதல் ஏடிஎம், டெபிட் கார்டு பயனாளர்களுக்கு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக கோடக் மகேந்திரா வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி தனியார் வங்கிகளும் அடிக்கடி டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அண்மையில் பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் டெபிட் கார்டு கட்டணத்தை உயர்த்தியது. அதாவது தற்போது வரை டெபிட் கார்டு தொலைந்து போனால் புதிய டெபிட் கார்டு வாங்குவதற்கு கோடக் மகேந்திரா வங்கி 200 ரூபாய் கட்டணமாக வசூல் செய்து வருகிறது. அதே சமயம் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் ஏடிஎம் பரிவர்த்தனை தானாகவே ரத்து செய்யப்பட்டால் அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 25 ரூபாய்க்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும்.
கார்டு இல்லாமல் பணப்பரிவினை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். இந்நிலையில் தற்போது இந்த வருடத்திற்கான அனைத்து டெபிட் கார்டுகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக கோடக் மகேந்திரா வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகின்ற மே 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.