• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகாசி அருகே, அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா…..

ByKalamegam Viswanathan

May 13, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கல்லமநாயக்கர்பட்டி, அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தலைமை பொறுப்பு மருத்துவர் டாக்டர் சுபாஷினி தலைமையில், டாக்டர்கள் நவீன், சசிகலா, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில், செவிலியர்கள் ஜமுனா, தீபா, முருகேஸ்வரி, சங்கரேஸ்வரி முத்துமாரியம்மாள், வேல்தங்கம் வரவேற்றனர். தாயில்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் செந்தட்டிக்காளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,

மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நோயாளிகளிடம் அன்பு, கருணையுடன் பணிபுரிவது தான் செவிலியர்களின் உன்னதமான வேலை. பெருந்தொற்று காலத்தில் அவர்களின் பணிக்கு ஈடாக எதுவுமே இருந்தது இல்லை. தங்களது உயிரைக்கூட துச்சமாக மதித்து வேலை பார்த்த செவிலியர்களுக்கு இந்த நேரத்தில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பது நமது அனைவரின் கடமையாகும் என்று பேசினார். நிகழ்ச்சியில் கல்லமநாயக்கர்பட்டி சிறுகுழு தன்னார்வ இயக்க குழுவினர், மருத்துவமனைக்கு தேவையான 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 பீரோக்களை வழங்கினார்கள். மருத்துவமனை வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. சீனியர் கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.