கர்நாடகா தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக துணை மேயர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் …
சேலம் நான்கு ரோடு பகுதியில் ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமி விளையாட்டு அமைப்பினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 135 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி தலைமையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் .இதே போல சேலம் நான்கு ரோடு பகுதியில் ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைப்பின் தலைவர் விஜய லட்சுமணன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரபு, கன்னங்குறிச்சி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணி, ராஜேந்திரன்,வாசு, கோவிந்தன், அய்யாசாமி, அமரன் ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகள் சிவராமன், மாஸ்டர் ராஜி, கண்ணன், ஈஸ்வரன், தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.