• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

அதிமுக பொன் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய செல்லூர் ராஜு…

Byகுமார்

Oct 18, 2021

அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மதுரை மாநகர மாவட்ட 66 – வது வட்ட அ.தி.மு.க. சார்பில் அதன் செயலாளர் ஜீவா ஆறுமுகம் தலைமையில் தெற்கு மாசி வீதியில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கலந்து கொண்டார்.

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது மதுரை மாநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.