• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் ரேணுகாதேவி அம்மனுக்கு பக்தர்களின் வினோத வழிபாடு..!

Byவிஷா

May 6, 2023

நேற்று சித்ராபௌர்ணமியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரேணுகாதேவி அம்மன் கோவிலில் உள்ள மண்புற்றுக்கு பால் ஊற்றியும், அங்கு இருக்கும் எறும்பு மற்றும் கரையான்களுக்கு தண்ணீரில், அரிசி மற்றும் சர்க்கரையைக் கலந்து பக்தர்கள் வினோதமாக வழிபட்டுச் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாரப்பநாயக்கன் பட்டியில் சுயம்புவாக மண் உருவானது. அதனை ரேணுகாதேவி அம்மனாக கருதி கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்புற்றில் பால் ஊற்றினர். இதனையடுத்து புற்றில் வாழும் எறும்பு மற்றும் கரையானுக்கு தண்ணீரில் அரிசி, சர்க்கரையை கலந்து வைத்து பொதுமக்கள் வழிபட்டு சென்றனர்.
இதனையடுத்து அதே பகுதியில் இருக்கும் அச்சம்மாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.