• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சிவகாசி அருகே 665 மது பாட்டில்கள் பறிமுதல் -4 பேர் கைது

ByKalamegam Viswanathan

May 4, 2023

சிவகாசி அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது 665 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காவல் சரகத்திற்கு உட்பட்ட கொத்தனேரி பகுதியில், டாஸ்மாக் மதுக்கடை அருகிலேயே சிலர் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்தப் பகுதியில் திடீர் சோதனை நடத்துமாறு டி.எஸ்.பி. தனஞ்ஜெயன், தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து தனிப்படை போலீசார், கொத்தனேரி பகுதியில் டாஸ்மாக் மது விற்பனை கடை அருகேயுள்ள, ராமர் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், தவசி, பிரபு, முருகன் ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 665 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து எம்.புதுப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் அச்சமின்றி 98847 41609 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்று, சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் தகவல் வெளியிட்டுள்ளார்.