• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக பொன் விழா கொண்டாட்டம்!..

43 இடங்களில்* கட்சி கொடியேற்றி எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திருவுருவ படங்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்..,

விருதுநகர், அக். 18 – அதிமுக பொன் விழா ஆண்டை முன்னிட்டு விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் உட்பட 43 இடங்களில் கட்சி கொடியேற்றி எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திருவுருவ படங்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுக பொன்விழா நேற்று தமிழகம் முழுவதிலும் அண்ணா திமுக சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. விருதுநகர் மேற்கு அண்ணா திமுக சார்பில் விருதுநகரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து விருதுநகர், ஆமத்தூர், ஆனைக்குட்டம் உட்பட 6 இடங்களிலும் திருத்தங்கல்லில் காளிமுத்து நகர், போலிஸ் காலனி முக்கு, மேலரதவீதி தேவர்சிலை அருகில், திருத்தங்கல் நகராட்சி அலுவலகம் அருகில், திருத்தங்கல் ரயில்வே கேட் பெரியார் சிலை ஆகிய 5 இடங்களிலும் சிவகாசி நகரில் சிவகாசி ரயில்வே பீடர் ரோடு, அண்ணா காலனி, பராசக்தி காலனி, இரட்டை சிலை, தேவர் சிலை, பழைய விருதுநகர் ரோடு கல்லறை தெரு, அம்பேத்கர் சிலை, வசந்த்அன் கோ அருகில், தட்டாவூரணி ஆகிய 9 இடங்களிலும் சிவகாசி ஒன்றிய பகுதிகளில் நாரணபுரம், விஸ்வநத்தம், ரிசர்வ்லயன், சித்துராஜபுரம், சாட்சியாபுரம், பள்ளபட்டி, செங்கமலநாச்சியார்புரம் உட்பட 15 இடங்களிலும் திருவில்லிபுத்தூர் நகர் பகுதியில் 3 இ்டங்களிலும் ராஜபாளையத்தில் பஞ்சுமார்க்கெட், பிஆர்சி டிப்போ அருகில், பொன்விழா மைதானம், சமந்தமுபுரம், மதுரை ராஜாகடைதெரு உட்பட 5 இடங்களிலும் மொத்தம் 43 இடங்களில் அண்ணா திமுகவின் கொடியேற்றி எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திருவுருவ படங்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன், திருவில்லிபுத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, விருதுநகர் மாவட்ட ஊராட்சி சேர்மன் வசந்திமான்ராஜ், துணைத்தலைவர் சுபாஷினி. விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமரன், விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரும் பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.என்.பாபுராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் துரைமுருகேசன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சீணிவாசபெருமாள், இலக்கிய அணிச் செயலாளர் மச்சராசா, விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற வர்த்தக அணி செயலாளர் சேதுராமன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், விருதுநகர் மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையதுசுல்தான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், துணைத்தலைவர் எம்.கே.என்.செல்வம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கே.கே.பாண்டியன், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் யுவராஜ் மற்றும் சிங்கராஜ், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிந்துமுருகன், ,மாவட்ட கழக இணைச் செயலாளர் அழகுராணி, பொதுக்குழு உறுப்பினர்கள் சித்துராஜபுரம் பாலாஜி, அருணா, தமிழரசிதங்கராஜ், சிவகாசி நகரக் கழகச் செயலாளர் அசன்பதுருதீன், திருத்தங்கல் நகரக் கழகச் செயலாளர் பொன்சக்திவேல், விருதுநகர் நகர கழக செயலாளர் முகம்மது நயினார், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணியன், ராஜபாளையம் நகரசெயலாளர் ரானாபாஸ்கரராஜ், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், வி.எஸ்.பலராம், தெய்வம், விருதுநகர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தர்மலிங்கம், விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கண்ணன், விருதுநகர் நகர கழக செயலாளர் முகம்மது நெய்னார், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முத்தையா, திருவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மயில்சாமி, ராஜபாளையம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஆர்.எம்.குருசாமி, ராஜபாளையம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நவரத்தினம், மம்சாபுரம் பேரூராட்சி கழகச் செயலாளர் அய்யனார்ஜி, வத்திராயிருப்பு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சேதுராமன், விருதுநகர் முன்னாள் யூனியன் தலைவர் கலாநிதி, வத்திராயிருப்பு பேரூர் கழக செயலாளர் வைகுண்டமூர்த்தி, கொடிக்குளம் பேரூராட்சி செயலாளர் சங்கரமூர்த்தி, சுந்தரபாண்டியபுரம் பேரூர் கழக செயலாளர் மாரிமுத்து, டபுள்யோ.புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் ஜெயகிரி, செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர் அங்குத்துரைபாண்டியன், சேத்தூர் நகரக் கழகச் செயலாளர் பொன்ராஜ்பாண்டியன், மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர்கள் அழகுராணி, அமல்ராணி, விருதுநகர் மகளிரணி செயலாளர் தனலட்சுமி, நகரக் கழக துணைச் செயலாளர் ஜோதிலட்சுமி, சிவகாசி நகர மகளிரணி செயலாளர் காமாட்சி, ராஜபாளையம் நகர மகளிரணி செயலாளர் ராணி, ஒன்றிய மகளிரணி செயலாளர்கள் கந்தலீலா, துரைச்சி, ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன், விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் ஒன்றிய கவுன்சிலர்கள் சுடர்வள்ளி, ஜெகத்சிங்பிரபு, மகளிர் அணி நாரணாபுரம் மகேஸ்வரி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்.

விருதுநகர் மேற்கு மாவட்ட ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போன்று விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் ஒவ்வொறு கிராமங்களிலும் நகர் பகுதியில் அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்தும் கட்சி நிர்வாகிகள் அதிமுக பொன்விழாவை சிறப்பாககொண்டாடினர்.