• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கர்நாடகா தேர்தல் பரப்புரையில்..,ரொட்டி சமைத்து கொடுத்து வாக்கு சேகரித்த வானதிஸ்ரீனிவாசன்..!

Byவிஷா

May 3, 2023

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பரப்புரையில், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதிஸ்ரீனிவாசன் அம்மாநிலத்தின் மிகவும் பிரபலமான உணவான ஜோலெட் ரொட்டியை சமைத்துக் கொடுத் வாக்கு சேகரித்தார்.
கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். இவர் தற்போது கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வானதி சீனிவாசன் அங்கு புகழ்பெற்ற உணவாக கருதப்படும் ஜோலெட் ரொட்டியை தன் கைகளால் சமைத்துள்ளார்.


இந்த ஜோலெட் ரொட்டி கர்நாடகாவில் மிகவும் பிரபலமான உணவு என்று கருதப்படுகிறது. இந்த ரொட்டியை இரவு நேரத்தில் பெரும்பாலான வீடுகளில் கைகளால் தட்டி சமைப்பார்களாம். இதன் சத்தம் கூட இனிமையாக இருக்கும் என்று கூறுகிறார்கள். எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் வீட்டுக்குள் சென்று ரொட்டியை தன் கைகளால் சமைத்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.