• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கவனம் ஈர்த்த பிச்சைக்காரன் – 2 ஆன்டி பிகிலி டிரெய்லர்

விஜய் ஆண்டனி நடித்து இயக்கியுள்ள ‘பிச்சைக்காரன் 2 படத்தின்’ ஆன்டி பிகிலி’ டிரெய்லர் ஏப்ரல்29, 2023 அன்று வெளியானது கடந்த மூன்று நாட்களில்
3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள
டிரெய்லரில் இடம் பெற்றுள்ள ஸ்டைலான காட்சிகள், ‘பிச்சைக்காரன்’ படத்திற்கான சிக்னேச்சர் இசை மற்றும் விஜய் ஆண்டனியின் திரைமொழி எல்லாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பிரதான இந்திய மொழிகளில் வெளியானடிரெய்லர் 24 மணி நேரத்திற்குள் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இப்படம் மே 19, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜீ மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.