• Sat. Jun 13th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது..?

Byவிஷா

Apr 29, 2023

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதியை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 19-ஆம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு 2022-23 ஆம் கல்வி ஆண்டில் கல்லூரி வேலை நாட்களை கணக்கிட்டு போதுமான வேலை நாட்கள் இருக்கிறதா என்பதை பார்த்த பிறகு கல்லூரிகள் இயங்கும் இறுதி நாளை அந்தந்த கல்லூரி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்கள், மண்டல கல்வி இயக்குனர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.