• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஹெலிகாப்டரில் ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்களுக்கு..,சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..!

Byவிஷா

Apr 28, 2023

இந்தியாவின் புகழ் பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் சென்று வருவது வழக்கம். சிறப்பு ரயில்கள் அல்லது பேருந்துகள் மூலமாக பக்தர்கள் பயணம் செய்து செல்வது வழக்கம். இந்தநிலையில் இதுபோன்ற புகழ்பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறி போலியான இணையதளங்கள் உருவாக்கப்பட்டு பக்தர்களிடம் பணம் வசூலித்து மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன்னதாக நிறுவனத்தின் சட்டபூர்வ அங்கீகாரம் மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.