• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் தொடர் கனமழையினால் பிளஸ் டூ மாணவன் உட்பட மூன்று பேர் பலி…

திக்குறிச்சி , வைக்கலூர் , முஞ்சிறை பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் உடைமைகளுடன் பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஜெபின் குழித்துறைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் அருகில் உள்ள குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழை பேச்சிபாறை , பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து சுமார் 25 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாறு , பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக திக்குறிச்சி மார்தாண்டம் சாலை , குழித்துறை மேல்புறம் சாலை துண்டிக்கப்பட்டது.

திக்குறிச்சி , வைக்கலூர் , முஞ்சிறை பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் உடைமைகளுடன் பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஜெபின் குழித்துறைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் அருகில் உள்ள குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். குறும்பனை பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் நிஷான், தனது தாத்தா வீட்டுக்கு வந்த நிலையில், அருகில் உள்ள வள்ளியாறு பகுதியில் குளித்த போது தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தான். கீரிப்பாரை காட்டாற்று வெள்ளத்தில் தொழிலாளி சித்திரவேல் இழுத்து செல்லப்பட்டார்.